கிழக்கு மாகாணத்தில் உள்ள சமூக அளவிலான பொருளாதார நிறுவனங்கள், சமூக-பொருளாதார விதிமுறைகள் மற்றும் வணிக உறவுகளை நன்கு புரிந்துகொள்ளும் நோக்கில், இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து, வணிக சுற்றுச்சூழல் அளவுகோல் (BEB) மற்றும் மோதல் மீதான பொருளாதார செலவு பற்றிய கணக்காய்வு 2019 டிசம்பரில் நடத்தப்பட்டது. அத்துடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சிறிய மற்றும் நடுத்தர வணிகங்களில் எவ்வாறு தாக்கம் செலுத்தியுள்ளன என்பதையும் அவற்றின் முறையான மற்றும் முறைசாரா சமூக மூலதனத்தையும் இந்த ஆய்வு மதிப்பிடுகிறது.
2019 ஆம் ஆண்டில், வறுமை பகுப்பாய்வு மையம் (CEPA), கிழக்கு மாகாணத்தில் முறையான மற்றும் முறைசாரா பொருளாதார நடவடிக்கைகளின் தரம் மற்றும் அளவு சார்ந்த விவரணையாக்கத்தை நடத்தியது. இந்த ஆய்வின் நோக்கம், குழுக்களுக்கிடையேயான கூட்டுச்செயல்பாடுகளை ஊக்குவிக்கும் மைக்ரோ மற்றும் சிறு நிறுவன மட்டத்தில் முறையான மற்றும் முறைசாரா தொழில்களை நன்கு புரிந்துகொள்வது மற்றும் P2P நடவடிக்கைகளை செயல்படுத்த சாத்தியமான தொழில்களை அடையாளம் காண்பதுமாகும். எனவே, ஆய்வானது பின்வரும் முக்கிய பகுதிகளை உள்ளடக்கியதாகும்:
- நிறுவனம் தொடர்பான தகவல்கள்
- வணிக தொடக்கம், பராமரிப்பு மற்றும் விரிவாக்கம்
- வணிகத்திற்கான நிதி
- சந்தைப்படுத்தல்
- சமூகங்களுக்கு இடையேயான ஈடுபாடு
- கூட்டு ஈடுபாடு
2020 ஆம் ஆண்டில், ஆசிய மன்றம் மற்றும் பங்காளர் அமைப்புக்கள், இத்திட்டத்தில் ஈடுபட்டுள்ள மைக்ரோ மற்றும் சிறு நிறுவன உரிமையாளர்கள் கோவிட்-19 தொற்றுநோயின் போது எதிர்கொள்ளும் சிக்கல்களைப் புரிந்துகொள்ள நிகழ்நிலை (ஆன்லைன்) கணக்காய்வை மேற்கொண்டன.
2020 ஆம் ஆண்டு மே மாதத்தில், ஆசிய மன்றமானது செயல்திட்ட கூட்டாளர்களுடன் இணைந்து, தொற்றுநோயின்போது செயல்திட்ட மாவட்டங்களில் ஆன்லைன் தளங்களுக்கு பங்கேற்பாளர்களின் அணுகலின் அளவை மதிப்பிடுவதற்காக ஒரு அளவுப் பகுப்பாய்வை நடத்தியது. அடிப்படை இணையத் தேவைகளுக்கான அணுகல், சமூக ஊடக தளங்களின் பயன்பாடு, ஆன்லைன் வசதிகள் தொடர்பான சராசரி செலவு மற்றும் ஆன்லைன் தகவல்தொடர்புகளை ஏற்றுக்கொள்ளல் குறித்து இந்த ஆய்வு கவனம் செலுத்தியது
நம்பிக்கை மட்டம், வலையமைப்புக்களின் தரம் மற்றும் புவியியல் எல்லைக்குள் வாழும் மக்களிடையேயான உறவுகளின் வலிமை ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்காக, 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், ஆசிய மன்றம் ஒரு சமூக மூலதன மதிப்பீட்டை நடத்தியது.
சமூக மூலதன மதிப்பீடு அம்பாறை
சமூக மூலதன மதிப்பீடு திருகோணமலை
சமூக மூலதன மதிப்பீடு மட்டக்களப்பு
அப்துல் ஹாலிக்கின் இந்தப் புகைப்படக் கட்டுரை மேலே குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் ஏற்பட்ட பரிமாணத்தினையும் வெற்றிகளையும் கற்ற பாடங்களையும் பலாபலன்களையும் உள்வாங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.