சமூக மூலதன மதிப்பீடு (SCA) வரையறுக்கப்பட்ட புவியியல் எல்லைகளுக்குள் உள்ள சமூகங்கள், மோதல்களின் போது எவ்வகையான பண்புகளை வெளிப்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிப்பதுடன், இந்தப் பகுதிகளில் மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக நம்பிக்கை, வலையமைப்புக்கள் மற்றும் உறவுகள் எவ்வாறு பலப்படுத்தப்படலாம் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்ட முயற்சிக்கிறது. பயிற்சிக் கையேடானது, ஆராய்ச்சியாளர்களின் எதிர்கால குறிப்புகளுக்காக, ஒரு SCA ஏன் மற்றும் எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது.
இந்தக் கையேடானது, உள் மற்றும் குழுக்களுக்கிடையேயான உரையாடல்களில் பயனாளிகள் ஈடுபடுவதற்கு முன்னர் அவர்களுக்கு பயிற்சியளிக்கும்போது நிகழ்ச்சித்திட்ட கூட்டாளர்களுக்கு வழிகாட்டியாக செயல்படுகிறது. பயிற்சியாளர்களுக்கு துணைபுரிவதற்காக கையேடு மூன்று பகுதிகளாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது: வணிக தொழில்முனைவு, மோதல் பகுப்பாய்வு மற்றும் பாலின சமத்துவம்.