சீனி மொஹமட் ஹபீபா மற்றும் சையது அலி முஹம்மது ரவூப், தம்பலகமுவ, திருகோணமலை

oneimage(1)
சீனி மொஹமட் ஹபீபா மற்றும் சையது அலி முஹம்மது ரவூப், தம்பலகமுவ, திருகோணமலை
oneimage(1)
சீனி மொஹமட் ஹபீபா மற்றும் சையது அலி முஹம்மது ரவூப், தம்பலகமுவ, திருகோணமலை
oneimage(1)
சீனி மொஹமட் ஹபீபா மற்றும் சையது அலி முஹம்மது ரவூப், தம்பலகமுவ, திருகோணமலை
previous arrow
next arrow

இன்ஸ்பயர்ட் கருத்திட்டத்திற்கான பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தில் ஹபீபா கலந்துகொள்ள விரும்பும் போதெல்லாம் “நான் எல்லாவற்றையும் கைவிட்டுவிட்டுப் போய்விடுவேன்” என அவர் நினைவுகூர்ந்தார். தன்னைக் கலந்துகொள்ள ஊக்குவித்த அயலவர்களான ஜபருல்லா மற்றும் பிரியதர்சனி ஆகியோருடன் சேர்த்து தனக்கு உதவக்கூடிய சகபாடிகளின் சமுதாயம் ஒன்றினை ஹபீலா நிகழ்ச்சித்திட்டத்தினுள் கண்டறிந்துள்ளார். “நான் முன்பு அதிகம் சம்பந்தப்படாத சமுதாயங்களுடன் உறுதியான பிணைப்புக்களை உருவாக்கும் வாய்ப்பு என் வாழ்வில் முதல் தடவையாக எனக்குக் கிடைத்துள்ளது” என அவர் கூறுகின்றார். இவ்வாறான சகோதரத்துவ உணர்வினை மீண்டும் உணரும் அனுபவத்தினைப் பெறுவதற்காக நிகழ்ச்சித்திட்டம் தொடரவேண்டும் என இவர் விரும்புகின்றார்.

இவர்களின் மகனால் முதலில் ஆரம்பிக்கப்பட்டு பின்பு ஹபீலாவினாலும் அவரின் கணவராலும் பொறுப்பேற்கப்பட்ட கோழிக்கடை முதலில் இவர்களின் வீட்டிற்கு முன்னால் சிறு இடத்தில் போடப்பட்ட உறுதியற்ற ஒரு கொட்டகையாகவே இருந்தது. இன்ஸ்பயர்டில் இருந்து மூன்றாம் தரப்பு முதலீட்டைப் பெற்றுக்கொண்டதில் இருந்து கற்களினால் ஒரு கடையினைக் குடும்பத்தினரால் கட்ட முடிந்திருக்கின்றது. இது தொடர்பாக இவர்கள் மிகவும் திருப்தியுற்றுள்ளனர். “நாம் நீண்ட தூரம் கடந்து வந்த உணர்வினை உணர்கின்றோம்” என ஹபீலா கண்ணீர் மல்கக் கூறினார். கட்டமைப்பின் ஒரு பகுதியாகத் தனது வீட்டின் எல்லைச் சுவரினைப் பயன்படுத்த அனுமதித்த தனது ஒன்றுவிட்ட சகோதரிக்கு ஹபீலா நன்றியுணர்வுடையவராக இருக்கின்றார். “எமக்கு உதவிய இவர்கள் இல்லாவிடின் நாம் இவ்வளவு தூரம் வந்திருக்க மாட்டோம்.”

வியாபாரம் செழித்தோங்குகின்றது என்பதை உறுதிப்படுத்த அவரின் முழுக் குடும்பமும் ஒத்துழைக்கின்றது. எழுத வாசிக்கத் தெரியாத ஹபீலாவின் கணக்குகளை முகாமைத்துவம் செய்வதற்கு அவரின் மகனும் மருமகளும் உதவுகின்றனர். கடையில் வேலை பார்க்க முறை எடுத்துக்கொள்ளக் கணவன் எப்போதும் தயாராக இருப்பதால் ஹபீலாவினால் ஓய்வெடுக்க முடிகின்றது. பெருவெற்றியுடன் சேர்த்து பேரம் பேசலுக்கான ஆற்றலும் கூடிவந்திருக்கின்றது, “நான் இருப்புக்களை வாங்க இப்போது செல்வதில்லை, மாறாக வியாபாரிகள்தான் எம்மைத் தேடி வருகின்றனர்” என ஹபீலா கூறினார். ஸ்டோர்ஸ் இப்போது சிறு பலசரக்குக் கடையாக விஸ்தரிக்கப்பட்டு அயலவர்களுக்குப் பலவித பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. ஹபீலாவின் மகன் வீட்டின் பின்புறத்தில் கோழிகளை அறுப்பதில் ஈடுபடுவார். கோழி விற்பனை இன்னும் நடைபெறுகின்றது. “எமது தயாரிப்புக்கள் புதியவை என்பதும் துப்பரவானவை என்பதும் எல்லோருக்கும் தெரியும் என்பதால் பிரதேசத்தில் உள்ள அனைவரும் எம்மிடம்தான் கோழி வாங்க வருகின்றனர்” என அலி கூறினார்.