புகைப்படக் கட்டுரை

பொருளாதார ஈடுபாட்டின் மூலம் உள்ளடக்கும் தன்மையை மேம்படுத்தல்

இலங்கையின் கிழக்கு மாகாணக் கதைகள் அப்துல் ஹாலிக் அசீசின் புகைப்படக் கட்டுரை

அப்துல் ஹாலிக்கின் இந்தப் புகைப்படக் கட்டுரை மேலே குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் ஏற்பட்ட பரிமாணத்தினையும் வெற்றிகளையும் கற்ற பாடங்களையும் பலாபலன்களையும் உள்வாங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, கருத்திட்டப் பங்குபற்றுனர்களின் தனிப்பட்ட, கூட்டு மற்றும் தொழில்ரீதியான வளர்ச்சியின் மீது கருத்திட்டத்தின் மூலமாகப் போஷிக்கப்பட்ட சமூக ஒத்திசைவுக்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் இடையிலான பிணைப்பினையும் உள்வாங்குவதற்கு இது முயற்சிக்கின்றது.

பின்புலம்

இலங்கையின் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்குக் கிழக்குப் பிரதேசங்களில் வரலாற்று ரீதியான பல இனத்துவப் பிணைப்புக்கள் சிதறடிக்கப்பட்டுள்ளன. இதனால் இனத்துவப் பதற்றங்களின் புதிய வடிவங்களினால் இச்சமுதாயங்கள் பாதிக்கப்படும் அபாயநேர்வுக்கு உள்ளாகியுள்ளன. வெவ்வேறு வகுப்புக்களையும் இனங்களையும் சமயங்களையும் சேர்ந்த குழுமங்களைப் பொருளாதாரச் செயற்பாடுகள் பாரம்பரியமாக இணைத்தாலும் மோதலின் புரியாப் போக்குகள் இந்தப் பினைப்பினைச் செல்லரிக்கச் செய்துவிட்டன. வெவ்வேறு இனத்துவச் சமுதாயங்கள் ஒன்றில் ஒன்று பரஸ்பரம் சார்ந்திருப்பதையும் அவற்றுக்கிடையிலான சகவாழ்வினையும் போஷித்து வியாபார உறவுகளாக மாற்றும் மீண்டெழுந்தன்மைமிக்க வாழ்வாதாரங்களை அடிமட்டத்தில் உருவாக்குவதற்கான வளங்களும் பயிற்சியும் உதவியும் சமுதாயங்களின் மத்தியில் இல்லாமல் இருக்கின்றன.

பொருளாதாரப் பரப்புக்களின் மூலம் இனங்களுக்கிடையில் தொடர்பினை உருவாக்குவது வாழ்வாதாரங்களை முன்னேற்றுவதற்கான இயற்கையான ஊக்குவிப்பினை வழங்குகின்ற காரணத்தினால் அது செயற்திறன் மிக்கது என்பது பல நாடுகளில் நிரூபிக்கப்பட்டு்ள்ளது. இவ்வாறான தொடர்பும் ஈடுபாடும் பகிரப்பட்ட தளங்களை மேம்படு்த்துகின்றது. இது ஒருவர் மற்றவரில் சார்ந்திருக்கும் தன்மையினைப் போஷிப்பதுடன் பங்குபற்றுனர்களுக்கு புலப்படத்தக்க பலாபலன்களை உருவாக்குகின்றது. இலங்கையில் த ஆசியா பவுண்டேசன் (TAF), பொருளாதாரத் தொடர்புகளின் மூலமும் ஈடுபாட்டின் மூலமும் சமுதாயங்களுக்கிடையிலான கலந்துரையாடலை மேம்படுத்துகின்றது.

இலங்கையில், த ஆசியா பவுண்டேசனினால் நிதியுதவி வழங்கப்படும் இன்ஸ்பயர்ட் கருத்திட்டம் வியாபாரத் துறையில் சமுதாயங்களுக்கிடையில் ஈடுபாட்டினை உருவாக்குவதன் மூலம் சமூக ஒற்றுமையினை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் கவனம் குவிக்கும் கருத்திட்டம் உள்ளூர்ப் பங்களார்களின் உதவியுடன் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது: சமூக ஒழுங்கிற்கான குழுச் செயற்பாடு (GAFSO), கிழக்குச் சுயசார்பு சமுதாய விழிப்புணர்வு அமைப்பு(ESCO), சர்வோதய, இலங்கை உள்ளூராட்சி அதிகாரசபைகள் சம்மேளனம் (FSLGA), மற்றும் Good Market. கிழக்கு மாகாணத்தில் முறைசார் மற்றும் முறைசாராப் பொருளாதாரத்தில் சம்பந்தப்பட்டுள்ள சகல சமுதாயங்களும் பொதுவான பொருளாதார நலன்களைச் சுற்றி ஒத்துழைப்புடன் இடையீடு மேற்கொள்வதற்கு உதவி வழங்கப்பட்டு, அதன் பலாபலன்கள் உள்ளடக்கும் தன்மைமிக்கதாகவும் அனைவருக்கும் சமமாகக் கிடைக்கக்கூடியதாகவும் இருந்து, அதனால் சமுதாயங்களுக்கு இடையிலான உறவுகளும் சமுதாய மட்டத்தில் முன்னேற்றமடையும் என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே இது மேற்கொள்ளப்படுகின்றது.

கிழக்கு மாகாணத்தில் முறைசார் துறைகளிலும் முறைசாராத் துறைகளிலும் ஈடுபட்டுள்ள சமுதாயங்களுடன் நெருக்கமாகப் பணியாற்றியதன் விளைவாகப் பொருளாதார ஈடுபாட்டின் மூலம் சமுதாயங்களுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான ஆற்றலை இன்ஸ்பயர்ட்(பொருளாதார அபிவிருத்தி மூலம் நீடுறுதியும் சமாதானமுமிக்க இனங்களுக்கிடையிலான உறவுக்கான முன்னெடுப்பு) உருவாக்கியுள்ளது. கருத்திட்டப் பயனாளர்களின் மத்தியில் கருத்திட்டம் தொடரான கலந்துரையாடல்களை நடத்தி, மொத்தமாக 178 நுண், சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்முனைவு உரிமையாளர்களின் மத்தியில் ஆரம்ப நிலைத் தொழில் முனைவுகளில் 92 முதலீடுகள் விநியோகிக்கப்பட்டன. உற்பத்திச் சுற்று மற்றும் / பெறுமதிச் சங்கிலி மூலமாகச் சமுதாயங்களுக்கு இடையில் ஒத்துழைப்பினை மேம்படுத்தி வலுப்படுத்தும் வியாபார எண்ணக்கருக்களுக்கு உதவுவதே இதன் நோக்கமாகும். கணக்கீட்டுத் திறன்கள் மற்றும் திட்டமிடலின் முக்கியத்துவம் உள்ளடங்கலாக வியாபார நடைமுறைகளிலும் செயன்முறைகளிலும் உறுதியான பயிற்சி பங்குபற்றியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பங்குபற்றுனர்களின் திறன்களை நடைமுறைப்படுத்த உதவிய வியாபாரச் சந்தைகளை த ஆசியா பவுண்டேசன் (TAF) 2020 செப்டெம்பரில் தொடராக நடத்தியது. தனிநபர்களின் மத்தியில் மிகச் சிறிய மட்டங்களில் வேறு பல்வேறு மாற்றங்களும் தாக்கங்களும் இடம்பெற்றுள்ளன. இவை பொதுவாக எதிர்வுகூற முடியாதவை என்பதுடன் இவ்வாறான ஒரு முன்னெடுப்பின் ஆற்றலில் எதிர்பாராத நலன்களையும் கொண்டுள்ளன. இன்ஸ்பயர்டின் உதவியின் மூலமாகப் பங்கேற்று மறுமலர்ச்சியடைந்த தனிநபர்களின் பயணங்களின் வழியே கூறப்பட்ட இந்த அம்சங்கள் சிலவற்றினைக் கோடிட்டுக்காட்டுவதே இக்கதைத் தொடரின் நோக்கமாகும்.

கருத்திட்டத் தலங்கள் ஒவ்வொன்றிலும் கருத்திட்டப் பயனாளர்களுடனும் உள்ளூராட்சி அதிகாரசபைகளுடனும் பிரதேச செயலாளர்களுடனும் மாகாண மட்ட அமைச்சுக்களுடனும் பவுண்டேசன் தொடரான அரச தனியார் கலந்துரையாடலை நடத்தியது. இந்தக் கலந்துரையாடல்கள் உள்ளூர் வியாபாரிகள் தற்போது முகங்கொடுக்கும் மற்றும் அண்மைக் காலத்தில் முகங்கொடுத்த பிரச்சினைகள் பற்றிய சமுதாயங்களுக்கிடையிலான கரிசனைகளைப் பகிர்வதற்கும் ஆக்கபூர்வமான மற்றும் நீடுறுதியான தீர்வுகளைக் காண்பதற்கும் ஒரு தளத்தினை வழங்கியது. ஆற்றல் உருவாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக Good Market உடனான ஒத்துழைப்புடன் பவுண்டேசன் மூன்று மாவட்டங்களிலும் உள்ள கருத்திட்டப் பங்குபற்றுனர்களின் மத்தியில் தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட பயிற்சிகளின் தொடரினையும் நடத்தியது.

சுயாதீனமான மற்றும் உறுதியான பெண் தொழில்முனைவு

அஹமட் லெப்பே ரிசானா – காரைதீவு, அம்பாறை

சுய விபரச் சுருக்கம்

அப்துல் ஹாலிக் அசீஸ் பல் துறை சார்ந்து இயங்கும் ஒரு கலைஞர், ஆய்வாளர், புகைப்படக் கலைஞர் மற்றும் ஊடகவியலாளர். ஒரு கலைஞர் என்ற ரீதியில் இவர் கொழும்பிலுள்ள சஸ்கியா பெர்ணாண்டோ பவனத்தினால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகின்றார். உள்நாட்டிலும் சர்வதேசத்திலும் இவரின் படைப்புக்கள் பரந்த அளவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு பத்திரிகையாளர் என்ற ரீதியில் இவர் சண்டே லீடர், அல் ஜசிரா மற்றும் சிஎன்என் ஆகிய நிறுவனங்களுடன் பணியாற்றி வருகின்றார். இவர் இலங்கையில் அபிவிருத்தித் துறை சார்ந்த அமைப்புக்களில் பரந்த விதத்தில் பணியாற்றி வருவதுடன் கலைஞராகவும் ஆய்வாளராகவும் ஆவணப் புகைப்படக் கலைஞராகவும் பங்களிப்பு வழங்கிவருகின்றார். இந்த நிறுவனங்களின் பயனாளர் சமுதாயங்களுக்கு அவை ஆற்றும் பணிகளைக் கோடிட்டுக்காட்டுவதற்கும் அப்துல் ஹாலிக் உதவி வருகின்றார். மேலதிக தகவல்களுக்குப் பின்வரும் இணையத்தளத்தினை அணுகவும் abdulhalikazeez.com