அரசசார்பற்ற நிறுவனங்கள் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் INSPIRED செயல்திட்ட பயனாளியை சந்தித்தார்
அரச சார்பற்ற நிறுவனங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் 2021 நவம்பர் 20 ஆம் திகதி அம்பாறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இது, ஆசிய மன்றம் மற்றும் அதன் சமூக அடிப்படையிலான பங்காளர் அமைப்பான, Group Action for Social Order (GAFSO) ஆகியன, INSPIRED திட்டத்தில் தங்கள் முன்னேற்றத்தை முன்வைக்க ஒரு வாய்ப்பாக அமைந்தது.
முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து, அரச சார்பற்ற நிறுவன செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் திரு.ராஜா குணரத்ன அவர்கள் GAFSO அலுவலகத்திற்கு முறைசாரா விஜயம் செய்து, INSPIRED திட்டத்தில் பங்குகொண்ட மாவடிப்பள்ளியைச் சேர்ந்த கைத்தறி வியாபாரியான திருமதி அஹமட் லெப்பை ரிசானாவைப் பார்வையிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார். அவரது விஜயத்தின் போது திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு வழங்கப்படும் நன்மைகளை நேரடியாக அவதானிக்க முடிந்தது. திட்டத்தின் வெற்றியைப் பாராட்டிய அவர், ஆசிய மன்றம் மற்றும் GAFSO ஆகிய இரு நிறுவனங்களுக்கும் தங்கள் மதிப்புமிக்க பணிக்காக நன்றி தெரிவித்தார். குறுகிய மற்றும் சிறு வணிக உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் இத்திட்டத்தின் முக்கியத்துவத்தைப் பிரதிபலித்த அவர், தேசிய மற்றும் சிறிய அளவிலான தொழில்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் இத்திட்டம் முக்கியப் பங்காற்றியது என்றும் வலியுறுத்தினார்.