நாட்டு மக்களின்
நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது சகல நாடுகளிலும் பிரதான இலக்கினைப் போன்று தேவையுமாகும். இலங்கையும் பொருளாதார சமூக மற்றும் கலாசார ரீதியில் முன்னேற்றகரமான அபிவிருத்தி மட்டத்தை எட்டுவதற்காக பயணித்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கே முயற்சிக்கின்றது. இச் செயற்பாட்டின் போது பிரதேச மட்டம் மற்றும் மாகாண மட்டத்தில் காணப்படும் சமநிலையின்மையினைக் கட்டுப்படுத்துவதற்கும் தேசிய பொருளாதாரத்திற்குப் பங்களிப்பினை வழங்குவதற்கும் நாட்டின் ஜனநாயகச் செயற்பாடுகளை தொடர்ந்தும் பலப்படுத்துவதற்கும் சிறந்த சேவைகள் நாட்டில் அமுலிலுள்ள மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற முறைமை ஊடாக முடிந்துள்ளது.