சிறு வணிக வர்த்தகக் கண்கா ட்சிகள் கிழக்கு இலங்கையில் சமூக ஒற்றுமையை ஊக்குவிக்கின்றன
piyoshila2021-05-18T11:59:10+00:00இலங்கையின் கிழக்கு மாகாணம் பரந்த நெல் வயல்களுக்கும், துடிப்பான மீன்பிடித் தொழிலுக்கும், அழகிய கடற்கரைகளுக்கும் பெயர் பெற்றது. இங்கு தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகங்கள் அருகருகே வாழ்வதுடன், இனரீதியாகவும் மத ரீதியாகவும் வேறுபட்டு காணப்படுகிறது. எவ்வாறாயினும், யுத்தம் முடிவடைந்ததிலிருந்து, கிழக்கு மாகாணமானது வளங்கள் மற்றும் அரசியல் அதிகாரத்திற்கான போட்டிகளால் ஓரளவு உந்தப்பட்டு, பரவலாக இடைக்கால மோதல்களுக்கு உள்ளாகிறது.
USAID உடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் ஆசிய மன்றம் ஒரு செயல்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது சமூக ஒத்திசைவுக்கும் பொருளாதார நற்பேறுகளுக்கு இடையில் ஒருவருக்கொருவர் சார்ந்திருப்பதை அடையாளம் காண்கிறது. 2018 ஆம் ஆண்டிலிருந்து, ஆசிய மன்றமும் எங்கள் சமூக அடிப்படையிலான கூட்டாளர்களும் இன-மத பிரிவுகளுக்கிடையில் இணைப்பை ஏற்படுத்தும் பொருளாதார உறவுகளை உருவாக்குவதற்கு சிறு மற்றும் மைக்ரோ வணிகங்களுடன் இணைந்து செயல்படுகின்றனர். புரிதல் மற்றும் பரஸ்பர நம்பகத்தன்மையை வளர்ப்பதன் மூலம், இந்த உறவுகள் இனங்களுக்கிடையிலான மோதல் அல்லது வன்முறை என்பவற்றை தணிப்பதுடன், சமூக மூலதனத்தையும் உருவாக்கும்.
செப்டம்பர் பிற்பகுதியில், எங்கள் உள்ளூர் கூட்டாளர்கள் செயல்திட்ட பங்கேற்பாளர்களின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தவும், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த உள்ளூர் வணிகங்களுக்கிடையில் உருவாக்கப்பட்டுள்ள இணைப்புகளை முன்னிலைப்படுத்தவும் இந்த சமூக ஒத்திசைவு கருப்பொருளை ஊக்குவிக்கும் தொடர்ச்சியான வர்த்தக கண்காட்சிகளை ஏற்பாடு செய்தனர். சமூகங்களுக்கிடையிலான முன்முயற்சியை ஆதரிப்பதற்கு நுகர்வோர் ஒன்றிணைவதற்கான ஒரு வாய்ப்பாகவும் இக்கண்காட்சிகள் அமைந்தன. இந்நிகழ்ச்சிகளில் சிரேஷ்ட உள்ளூர் மற்றும் மாகாண அரசாங்க அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்கள், அனைவரும் பகிர்ந்து கொள்ளக்கூடிய வளமான எதிர்காலத்திற்காக அனைத்து சமூகங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
உலகின் பல பகுதிகளைப் போலவே, இலங்கையும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிகழ்வுகள் செயல்திட்ட பங்கேற்பாளர்களுக்கு பொருளாதார ஊக்கத்தைப் பெறுவதற்கும் புதிய வணிக கூட்டாண்மை மற்றும் வாய்ப்புகளை வளர்ப்பதற்கும் ஒரு தருணமாக அமைந்தது. ஏற்கனவே பங்கேற்ற சிறு மற்றும் மைக்ரோ வணிக உரிமையாளர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு, ஆசிய மன்றம் வரும் ஆண்டில் இதே போன்ற நிகழ்வுகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது. மேலும், எங்கள் உள்ளூர் கூட்டாண்மை மற்றும் உள்ளூர் அரசாங்கத்துடனான எங்கள் பணி உறவு போன்றவற்றை உருவாக்குவதற்கும் எதிர்பார்க்கிறது.
மூலம்: https://asiafoundation.org/2020/10/19/small-business-trade-fairs-promote-social-cohesion-in-eastern-sri-lanka/