A. அநுலா பிரியதர்ஷனி பெர்னாண்டோ, தம்பலகமுவ, திருகோணமலை

oneimage(1)
A. அநுலா பிரியதர்ஷனி பெர்னாண்டோ, தம்பலகமுவ, திருகோணமலை
oneimage(1)
A. அநுலா பிரியதர்ஷனி பெர்னாண்டோ, தம்பலகமுவ, திருகோணமலை
oneimage(1)
A. அநுலா பிரியதர்ஷனி பெர்னாண்டோ, தம்பலகமுவ, திருகோணமலை
previous arrow
next arrow

அநுலா பிரியதர்ஷனி பெர்னாண்டோ சமூகத்திற்கு உதவுவதில் மிகுந்த அர்ப்பணிப்பு உடையவர் என்பதால் இவர் ஒன்பது சமுதாய அமைப்புக்களில் உறுப்பினராக இருந்து அவற்றில் பல்வேறு பதவிகளையும் வகித்துவருகின்றார். இதில் சர்வோதயவும் அடங்குகின்றது. இப்பிரதேசத்தில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து இவர் இதில் உறுப்பினராக இருந்து வருகின்றார். “நான் விரும்பினாலும் என்னால் இந்தப் பதவிகளை விட முடியாது ஏனெனில் எனது பொறுப்புக்களைப் பாரமேற்க நம்பத்தகுந்த யாருமில்லை” என அவர் சிரித்தபடி கூறினார்.

இவரும் இவரது கணவரும் சொற்பமான பணத்துடன் இருபது வருடங்களுக்கு முன்னர் திருகோணமலைக்கு வந்தனர். யுத்தத்தின் ஆபத்துக்கள் காரணமாக அவர்கள் இங்கே வந்ததும் கணவரின் மாணிக்கக் கல் வியாபாரம் நின்றுபோனது. தம்பதியினர் நானாவித பொருட்களை விற்கும் சிறு கடை ஒன்றினைத் திறந்தனர். இதில் எழுதுகருவிகள், விளையாட்டுப் பொருட்கள் போன்றவையும் விற்கப்பட்டன. “இந்தக் கடைக்குத்தான் நன்றி கூறவேண்டும். இப்போது எமக்கென ஒரு வீடும் ஒரு காணியும் இருக்கின்றன” என பிரியதர்ஷனி புன்னகையுடன் கூறினார்.

வியாபார அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களில் நீண்டகாலமாகப் பங்குபற்றுபவர் என்ற ரீதியில் பிரியதர்ஷனி அவரின் பணிக்காக எண்ணற்ற விருதுகளை வென்றுள்ளார். குறிப்பாக அவரின் கைவினை வேலைக்காக விருதுகளைப் பெற்றுள்ளார். சமுதாயப் பணிக்கான பிரியதர்ஷனியின் ஆசையினைத் தொடர்வதற்கான, உதவியும் ஊக்கமும் தேவைப்படும் தனது நண்பர்களுடனும் சகபாடிகளுடனும் சேர்ந்திருப்பதற்கான ஓர் அடிப்படை வழியாக இன்ஸ்பயர்ட் நிகழ்ச்சித்திட்டம் காணப்பட்டது. இவர்களுள் ஒருவரான ஜபருல்லாவின் சகோதரி (சமுதாயத்தினைச் சேர்ந்த மற்றொரு பங்குபற்றுனர்) இப்போது அவரின் கைவினைத் தயாரிப்பான பைகளை பிரியதர்ஷனியின் கடையின் மூலம் விற்பனை செய்து வருகின்றார்.

தனக்கெனப் பிள்ளை இல்லாத பிரியதர்ஷனியின் மனதில் பாடசாலைச் சிறுவர்களுக்கென விசேட இடமிருக்கின்றது. இவரின் வியாபாரத்தினால் பிரதானமாக நன்மையடைபவர்கள் இவர்களே. இதனால்தான் இவர் தனது கடையினைத் தவறாமல் காலை 6.30 மணிக்கே ஒவ்வொரு நாளும் திறந்துவிடுகின்றார். கடின உழைப்புக்குப் பழக்கப்பட்ட பிரியதர்ஷனி போயா விடுமுறை தவிர்ந்த அனைத்து நாட்களிலும் தனது கடையினைத் திறக்கின்றார்.