பிரியதர்சனியும் சமிலவும் அவர்களின் மகனின் நன்பணின் தாய் மூலமாகவே காளான் பயிர்ச்செய்கை தொடர்பாக முதலில் அறிந்துகொண்டனர். நுவரெலியாவைச் சேர்ந்த இவர்களின் உறவினர் ஒருவரும் காளான் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவந்ததுடன் இவர்களையும் அதை முயற்சித்துப் பார்க்குமாறு ஊக்குவித்தார். “எப்படியோ முயற்சி செய்து பார்ப்பதற்கான நல்ல ஆலோசனை போல் அது எமக்குத் தென்பட்டது” என பிரியதர்ஷனி கூறுகின்றார். உள்ளூர் விவசாயத் திணைக்களத்தினைத் தொடர்புகொண்ட அவரின் கணவர் அவர்கள் மிகுந்த ஊக்குவிப்பினை வழங்குபவர்களாக இருப்பதைக் கண்டறிந்தார்.
“அவர்கள் உடனடியாகவே எமக்குப் பயிற்சி வழங்க முன்வந்தனர். நாம் ஆரம்பிப்பதற்கான பூர்வாங்க நிபுணத்துவத்தினை அவர்கள் எமக்கு வழங்கினர்” எனச் சமில கூறுகின்றார். அதன் பின்னர் மூன்று முதல் நான்கு மாதங்களினுள் தம்பதியினர் கப்சோ மற்றும் இன்ஸ்பயர்ட் நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்துகொண்டனர்.
இவர்களின் வியாபாரத்தினை ஒழுங்கமைப்பதற்கு நிகழ்ச்சித்திட்டம் உதவிய அதேவேளை இவர்களின் மிகச் சிறந்த புத்தாக்கம் சந்தைப்படுத்தல் பரப்பில் நிகழ்ந்ததுடன் அது இவர்கள் பங்குபற்றிய வியாபாரச் சந்தையிலேயே விருத்திசெய்யப்பட்டது. “நாங்கள் வாடிக்கையாளர்களை முதல் தடவையாக நேருக்கு நேர் சந்தித்துத் தொடர்புகொண்டது இங்கேதான்” எனப் பிரியதர்ஷனி கூறுகின்றார். இவர்களின் உற்பத்தியினை எவ்வாறு மிகச் சிறந்த முறையில் சந்தைப்படுத்தலாம் என்பதைப் பற்றிச் சிந்திப்பதற்கு ஒட்டுமொத்தக் குடுப்பமும் ஒன்றுசேர்ந்தது. இவர்கள் கண்ட தீர்வு அபாரமானது என்றால் மிகையாகாது. தங்களின் உற்பத்திகளை அதிக அளவில் விற்பனை செய்வதற்கு இருந்த ஒரே தடை காளானை எவ்வாறு சாப்பிடலாம் என்பது பற்றி மக்கள் போதிய அளவு அறிந்திராமையே என்பதை இவர்கள் உணர்ந்துகொண்டனர். பிரியதர்ஷனியின் கடையில் காளானில் செய்யப்பட்ட ருசிமிக்க உணவுகள் ஏராளமான வகைகளில் விற்பனை செய்யப்பட்டன. “அது ஒரு பெரிய வெற்றிதான்” எனச் சந்தையில் தனது கடை முதல் பரிசு பெற்றமையினை அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
வேட்டையாடி உண்பவர்களினால் மாத்திரமே காளான்கள் பாரம்பரியமாக உண்ணப்பட்டு வந்துள்ளமையினால் இலங்கையில் நகரப் பிரதேசங்களுக்கு வெளியே இது பிரபலமான உணவாக இல்லாமல் இருக்கின்றது. தமது வீட்டில் நண்பர்களுக்கு உணவளித்ததன் மூலம் வாய் மூலம் செய்தி பரவிக் கிராமத்தில் ஒரு சிறந்த சந்தையினை இத்தம்பதியினர் ஏற்கனவே உருவாக்கியுள்ளனர். பல சிறுபான்மைச் சமுதாயங்களுக்கு அருகாமையில் வாழும் இவர்கள் பாரம்பரியமாகச் சிங்களச் சம்பிரதாயமாக இருந்த விடயம் எவ்வாறு தமிழ் மற்றும் முஸ்லிம் நண்பர்களின் மத்தியில் பரவியுள்ளது என்பதை மகிழ்வுடன் குறிப்பிடுகின்றனர்; “காளான் வாங்குவதற்காக மக்கள் எங்களைத தேடி வருவது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. அவர்கள் காளான் வாங்கிச் செல்கையில் அதனைச் சமைப்பதற்கான சமையல் குறிப்பினையும் கேட்கின்றனர்!” காளான் நுகர்வின் நன்மைகளையும் சாத்தியங்களையும் பற்றித் தம்பதியினர் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு அறிவூட்டுவதற்கு முனைப்பான அணுகுமுறையினை எடுக்கின்றனர். இது நீண்டகால வளர்ச்சிக்கான மிகவும் சாமர்த்தியமான ஓர் உபாயமார்க்கமாகும்.