மொஹிதீன் பாவா அப்துல் லத்தீப், பொத்துவில், அம்பாறை மாவட்டம்

oneimage(1)
හේරත් මුදියන්සේලාගේ ප්‍රියදර්ශනී, අඩාලච්චේන, අම්පාර දිස්ත්‍රික්කය
oneimage(1)
හේරත් මුදියන්සේලාගේ ප්‍රියදර්ශනී, අඩාලච්චේන, අම්පාර දිස්ත්‍රික්කය
oneimage(1)
හේරත් මුදියන්සේලාගේ ප්‍රියදර්ශනී, අඩාලච්චේන, අම්පාර දිස්ත්‍රික්කය
previous arrow
next arrow

ஒரு விற்பனையாளராக மொஹிதீன் பாவா அப்துல் லத்தீப் வரித்துக்கொண்டுள்ள உன்னதமான பண்புகள் பல வருட செவிமடுப்பு மூலமாகவும் பயிற்சி மூலமாகவும் கவனமாக வளர்த்தெடுக்கப்பட்டவையாகும். ‘இன்ஸ்பயர்டினால்’ ஏற்பாடுசெய்யப்பட்ட வியாபாரச் சந்தையின் போது இத்திறன்கள் உச்சம் தொட்டன.

“எதையுமே வாங்கும் ஆர்வமற்ற மக்களுடன் நான் மணித்தியாலக்கணக்கில் பேசவேண்டியிருந்ததைப் பொறுத்துக்கொண்டு இருந்தேன். ஆனால் பொறுமையாக இருப்பதன் பெறுமதியினையும் ஒவ்வொருவரையும் சாத்தியமுள்ள வாடிக்கையாளராக நடத்துவதன் பெறுமதியினையும் நான் கற்றுக்கொண்டேன்”.

அவர் தன்னுள் பதித்துக்கொண்ட பல்வேறு திறன்களுள் சிறந்த கணக்கீட்டு நடைமுறைகளுக்கான தேவை பற்றிய கூர்மையான விழிப்புணர்வும் பொருள் இருப்பு முகாமைத்துவமும் அடங்குகின்றன. “அந்த நிகழ்ச்சித்திட்டம் அனுபவமற்ற ஒரு வியாபாரிக்கும் தொழில்ரீதியான ஒரு வியாபாரிக்கும் இடையிலான வித்தியாசத்தினை என்னுள் உருவாக்கியது” எனப் பாடசாலையினை முடித்துத் தையல்காரராகத் தன் தொழில் வாழ்வினை ஆரம்பித்த அப்துல் லத்தீப் குறிப்பிட்டார்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்த பலரும் 80களிலும் 90களிலும் மத்தியகிழக்கிற்குப் பசுமையான வாழ்வு தேடிச் சென்றது போல் சென்ற அப்துல் லத்தீப் அங்கே திண்டுவேலையில் (upholstery) அறிவினைப் பெற்றுக்கொண்டார். மத்திய கிழக்கில் இருந்து திரும்பி வந்த அப்துல் லத்தீபுக்கு திறன்களும் அறிவும் இருந்தபோதிலும் அந்த அறிவுக்கும் திறனுக்கும் ஏற்ப ஒரு வியாபாரத்தினைத் தொடக்குவதற்கான தேவை காணப்பட்டது. அவரது அறிவினையும் திறன்களையும் உள்ளூர்ச் சூழமைவுக்கு ஏற்ப அவரினால் தகவமைக்க முடியவில்லை. “சந்தைக்குத் தேவைப்பட்ட தரத்தினை விட மிகவும் உயர்ந்த தரத்தில் என்னுடைய வேலைகள் அமைந்திருந்தன”. இதனால் அவருக்குப் பல இழப்புக்கள் ஏற்பட்டு இறுதியில் அவர் மீண்டும் மத்திய கிழக்கிற்கே திரும்பிச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

“நான் இறுதியாக மீண்டும் திரும்பி வந்தபோது கெப்சோவினைச் (GAFSO – சமூக ஒழுங்கிற்கான குழுச் செயற்பாடு எனும் பிராந்திய அமைப்பு) சந்தித்து ‘இன்ஸ்பயர்டைப்’ பற்றித் தெரிந்துகொண்டேன்”. பின்னர் நடைபெற்ற அமர்வுகள் அப்துல் லத்தீப் அவரின் வியாபாரத்தினைப் பற்றி மிகவும் பகுத்தறிவு வாய்ந்த வகையில் சிந்தித்து அவரின் வளர்ச்சியினைத் திட்டமிட்டு மேற்கொள்ள அவருக்கு உதவின.

அவர் ஏனைய சமுதாயங்களைச் சேர்ந்த வியாபாரிகளையும் சந்தித்து அவர்களுடன் விரைவாக நட்பினை ஏற்படுத்திக்கொண்டார். தனித்த முஸ்லிம் இனத்தினைச் சேர்ந்த லத்தீப் தான் தமிழர்களையும் சிங்களவர்களையும் பற்றிய பிரக்ஞையற்ற சந்தேகங்களைக் கொண்டிருந்ததாகவும் ஆனால் அவை நிகழ்ச்சித்திட்டத்தின் போது விரைவில் மறைந்துவிட்டதாகவும் கூறுகின்றார். “நாங்கள் இப்போது ஒருவர் மற்றவரை மச்சான் என்றுதான் அழைக்கின்றோம்” என அப்துல் லத்தீப் புன்முறுவலுடன் கூறுகின்றார்.