தனது விவாகரத்தினை முற்று முழுவதும் நிதானமாகக் கையாண்ட மிகவும் சுயாதீனமான பெண்ணான ஆர்த்திகா தனது இரண்டு பிள்ளைகளையும் தனியாளாக நின்று வளர்த்த அதேவேளை தனது வியாபார மதிக்கூர்மையினையும் பல்வகைமைப்படுத்தி மேம்படுத்தியிருக்கின்றார்.
அயராதுழைக்கும் தொழில்முனைவரான ஐரின் ராஜா ஆர்த்திகா ஏறாவூர் பற்று எனும் அழகிய கிராமத்தில் உள்ள அவரின் விசாலமான தென்றல் தழுவும் வளாகத்தின் இதத்தில் கவலையின்றித் திளைத்திருக்கின்றார். “மலிவானது மட்டுமன்றி எனது கால்நடைகளை வளர்ப்பதற்குத் தாராளமாக இடமும் இருக்கின்றது என்பதை உணர்ந்த நான் இங்கே 2020 ஏப்ரலில் வந்தேன்.” அவரது பண்ணையில் உலாவும் தாராக் கூட்டங்களும் கோழிகளும்தான் அவர் வளர்ப்பவை. வளாகத்தின் ஒரு பகுதி மரக்கறி வளர்ப்பதற்கென ஒதுக்கப்பட்டுள்ளது.
தாராக்களையும் கோழிகளையும் வளர்த்து மரக்கறிகளைப் பயிர்செய்வதற்கு மேலதிமாக காலையுணவினை விற்கும் ஒரு சிறிய கடையினையும் ஆர்த்திகா நடத்திவருகின்றார். பெருந்தொற்றுடன் தொடர்புடைய சிக்கல்கள் காரணமாகக் கடையினை மூடவேண்டியேற்பட்டது. ஆனால் நிலைமை மாறிவிடும் என அவர் எதிர்பார்க்கின்றார். தற்போது ஆர்த்திகா உலர் சிற்றுண்டிகளை உற்பத்திசெய்து பொதிசெய்து உள்ளூர்க் கடைகளுக்கு அவராகவே விநியோகம் செய்கின்றார். பொதியிடல் உத்திகளையும் உற்பத்திகளின் ஆயுட்கால மதிப்பீடு மற்றும் வியாபாரத்தின் ஏனைய அம்சங்களையும் கற்றுக்கொள்ள அவர் ஆரம்பத்தில் இன்ஸ்பயர்ட் நிகழ்ச்சித்திட்டத்துடன் இணைந்தமையால் ஏனைய பல வாய்ப்புக்கள் ஆர்த்திகாவுக்குக் கிடைத்துள்ளன.
“”எனக்கு ஏனைய பல சமுதாயங்களைச் சேர்ந்த நண்பர்கள் கிடைத்துள்ளனர்” என ஆர்த்திகா கூறுகின்றார். தனக்கு இப்போது முதல் தடவையாக முஸ்லிம் நண்பர்கள் கிடைத்துள்ளதாகக் குறிப்பிடும் ஆர்த்திகா அந்த நண்பர்களுள் ஒருவரான ஓட்டமாவடியைச் சேர்ந்த நபீரா கிழக்குக் கரையோரப் பெண்களுக்காக ஆரம்பித்துள்ள திறன் விருத்தி நிகழ்ச்சித்திட்டத்தில் கற்பிப்பதற்காகத் தன்னை அழைத்துள்ளதாகக் குறிப்பிட்டார். “நான் பெற்ற திறன்களையும் அறிவினையும் மற்றவர்களுக்கு வழங்குவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றன்” என ஆர்த்திகா கூறினார்”.