அப்துல் அசீஸ் ஜபருல்லா – தம்பலகமுவ, திருகோணமலை

oneimage(1)
அப்துல் அசீஸ் ஜபருல்லா – தம்பலகமுவ, திருகோணமலை
oneimage(1)
அப்துல் அசீஸ் ஜபருல்லா – தம்பலகமுவ, திருகோணமலை
oneimage(1)
அப்துல் அசீஸ் ஜபருல்லா – தம்பலகமுவ, திருகோணமலை
previous arrow
next arrow

அப்துல் அசீஸ் ஜபருல்லா பத்து வருடங்களுக்கு முன்னர் மாடுகளை வளர்க்கத் தொடங்கினார். “நான் தொன்னூறாயிரம் ரூபாவுக்கு வாங்கிய இரண்டு மாடுகளுடன் ஆரம்பித்த மாடு வளர்ப்புப் பெருகி இன்று எனது மாட்டுப் பட்டியின் மதிப்புக் கிட்டத்தட்ட பத்து லட்சம் ரூபாவாகக் காணப்படுகின்றது” என அவர் கூறினார். இவர் எப்போதுமே பசுக்கள் மீது அன்பு கொண்டவர். எந்த அளவுக்கு இவரின் அன்பு இருந்தது என்றால் சிறுவராக இருக்கையில் மற்றவர்களின் பசுக்களையும் அறியாமல் தனது வீட்டுக்குக் கூட்டி வந்துவிடுவார். இவ்வாறான குறும்புக்காரனாக இருந்து பரிணமித்தவர்தான் ஜபருல்லா. சாதுரியமான வியாபரியாக மாறியுள்ள இவரின் பின்னால் மறைந்திருக்கும் துடுக்கான ஆன்மாவை இவரின் குறும்புத்தனமும் சதா இழையோடும் புன்னகையும் காட்டிக்கொடுத்துவிடும்.

இவரின் மொத்தக் குடும்பமும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளது. இவரின் மனைவி முதல் இவரின் மகளும் சிறிய மகனும் கூட வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். “மாடுகளைப் பார்த்துக்கொள்ள எப்போதும் யாராவது இருப்பார்கள்” என அவர் கூறினார். இதனால், இவரின் வேலைகளுக்கு எவ்வித பாதிப்புமின்றி இன்ஸ்பயர்ட் நிகழ்ச்சித்திட்டத்தில் இவரால் கலந்துகொள்ள முடிந்தது. இவருக்கு ஒரு தடவை சுகவீனம் ஏற்பட்ட போது இவரின் சார்பில் இவரின் மனைவி கலந்துகொண்டார். “நாம் எதையும் தவறவிட மாட்டோம்.”

நிகழ்ச்சித்திட்டம் ஜபருல்லாவுக்கு மிகவும் பலன்மிக்கதாக அமைந்திருந்தது. அவர் தனது கணக்குப் புத்தகத்தினைப் பெருமிதத்துடன் எம்மிடம் காட்டினார். “நான் கணக்குப் படிப்பதற்கு முன்னர் எமது கொடுக்கல் வாங்கல்கள் பற்றிய பதிவினைப் பேணவில்லை” எனக் கூறிய ஜபருல்லா இது தனது வியாபாரத்தினைத் திட்டமிட உதவியதாகக் குறிப்பிட்டார். மாட்டெருவில் இருந்து பசளை தயாரிக்கும் எண்ணத்தி்னையும் நிகழ்ச்சித்திட்டம் தனக்குள் ஏற்படுத்தியதாகக் கூறிய ஜபருல்லாவுக்கு இது இப்போது வெற்றிகரமான குறைநிரப்பு வருமான மூலமாக இருந்து வருகின்றது. நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் இவருக்குக் கிடைத்த தொடர்புகளால் இவரின் எருதுகளை வாங்குவதற்கான கொள்வனவாளர் ஒருவரும் ஜபருல்லாவுக்குக் கிடைத்துள்ளார். இவர் சிகிரியாவில் முக்கிய அதிதிகளையும் சுற்றுலாப் பயணிகளையும் இழுக்கும் மாட்டுவண்டிலுக்கு இந்த எருதுகளைப் பயன்படுத்துகின்றார்.

அயராது பணியாற்றும் சமூகப் பணியாளரான ஜபருல்லாவும் அவரின் அயலவரான பிரியதர்சனியுமே நிகழ்ச்சித்திட்டத்திற்குத் திருகோணமலைப் பங்குபற்றுனர்கள் காட்டிய ஊக்கத்திற்குப் பிரதான காரணமாகும். “நீங்கள் பங்குபற்றக்கூடிய அடுத்த நிகழ்ச்சித்திட்டம் பற்றி ஒவ்வொருவரும் அறிந்துள்ளனர் என்பதையும் அதில் அவர்கள் கலந்துகொள்கின்றனர் என்பதையும் நான் உறுதிசெய்வேன்” என ஜபருல்லா கூறினார். இன்ஸ்பயர்டில் மேற்கொள்ளும் கூட்டுப் பங்காண்மையினால் மட்டுமே சமுதாயத்திற்கு நன்மையினைக் கொண்டுவர முடியும் என்பதை ஜபருல்லா உணர்ந்துள்ளார்.