எம்மைப் பற்றி

About asia foundation

செயல்திட்ட மேலோட்டம்

INSPIRED (INitiative for Sustained Peaceful Inter-ethnic Relations through Economic Development) திட்டமானது, வணிகத் துறையில் சமூகங்களுக்கிடையேயான ஈடுபாட்டின் மூலமாகவும், நிறுவனமயமாக்கலுக்கான ஆலோசனை மற்றும் வெற்றிகரமான சமூக நல்லிணக்க முன்முயற்சிகளின் உள்ளூர் பிரதிபலிப்பு மூலமாகவும் சமூக ஒற்றுமையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முன்முயற்சித் திட்டமானது கிழக்கு மாகாணத்தில் கவனம் செலுத்துவதுடன் உள்ளூர் பங்காளர்களின் ஆதரவுடன் செயல்படுத்தப்படுகிறது; கெப்சோ (GAFSO), கிழக்கிலங்கை தன்நம்பிக்கை சமூக எழுச்சி நிறுவனம் (ESCO), சர்வோதய, இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம் (FSLGA) மற்றும் Good Market. கிழக்கு மாகாணத்தில் முறையான மற்றும் முறைசாரா பொருளாதாரத்தில் ஈடுபட்டுள்ள சமூகங்கள், நன்மைகளுக்கான அணுகல் அனைத்தையும் உள்ளடக்கிய மற்றும் அனைவருக்கும் சமமாக கிடைக்கக்கூடிய பொதுவான பொருளாதார நலன்களைச் சுற்றி ஒத்துழைப்புடன் செயல்பட்டால் சமூக மட்டத்தில் சமூகங்களுக்கு இடையிலான உறவுகளும் மேம்படும்.USAID, ஆசிய மன்றத்துடன் இணைந்து இந்தத் திட்டத்திற்கு அனுசரணை வழங்குகிறது.

நோக்கம்

சமூகங்களை நெருக்கமாக இணைக்கும் ஓர் வணிகத் தளம்

பணி

நிலையான வணிக உறவுகள் மூலம் அனைவருக்கும் இடையிலான சமூக ஈடுபாடு மற்றும் பொருளாதார வாய்ப்புகளை உறுதி செய்வதன் மூலம் இலங்கையில் சமூக ஒற்றுமையை ஊக்குவித்தல்.