சமூக மட்ட பட்டறைகள்
கடந்த சில வருடங்களில், கூட்டாளர் அமைப்புகளின் ஆதரவுடன் செயல்திட்ட பயனாளிகளிடையே தொடர்ச்சியான பட்டறைகள் நடத்தப்பட்டன.
சமூக அடிப்படையிலான கூட்டாளர்களுக்கான பயிற்சி மற்றும் வழிகாட்டல் ஆதரவு அமர்வுகள்
2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், ஆசிய மன்றம், சவாலான ஒரு சூழலில் உரையாடல் அமர்வுகளை செயல்படுத்துவதற்கும் எளிதாக்குவதற்கும் தமது சமூக அடிப்படையிலான கூட்டாளர்களுக்கு ஆதரவளிப்பதற்காக பயிற்சி மற்றும் வழிகாட்டல் அமர்வுகளை நடத்தியது. இந்த அமர்வுகள் எங்கள் கூட்டாளர்களுக்கு அவர்களின் வசதி திறன்களையும் வணிக உரிமையாளர்களுடன் தொடர்பு கொள்ளும்போது எழக்கூடிய கடினமான கேள்விகளைக் கண்டறிந்து பதிலளிக்கும் திறனையும் மேம்படுத்த உதவியது.
இதைத் தொடர்ந்து, எங்கள் சமூக அடிப்படையிலான கூட்டாளர்கள் செப்டம்பர் 2019 இல் 344 செயல்திட்ட பங்கேற்பாளர்களிடையே நம்பிக்கையையும் தன்நம்பிக்கையையும் வளர்க்கும் நோக்கத்துடன் தொடர்ச்சியான பட்டறைகளை நடத்தினர். இது தங்கள் சமூகங்களுக்குள் சமூக ஒற்றுமையை மேலும் ஊக்குவிக்க பயன்படும் உறவுகளை உருவாக்குவதற்கும் பலப்படுத்துவதற்கும் அவர்களுக்கு உதவுகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் தாக்கம் மற்றும் சமூகங்களுக்கிடையிலான உறவுகளில் அது ஏற்படுத்திய சிரமம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இதன் நோக்கம் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களைத் தொடர்ந்து பங்கேற்பாளர்கள் உருவான சூழ்நிலை மற்றும், கிழக்கு மாகாணத்தில் உள்ள வணிக சமூகத்தின் மீதான அதன் பரந்த தாக்கம் என்பவற்றை நன்றாகப் புரிந்துகொள்வதற்கும் இந்தக் கலந்துரையாடல்கள் செயல்திட்டத்திற்கு உதவி புரிந்தன.
வணிக திறன்கள் மற்றும் பாலின சமத்துவ பட்டறைகள்
இதற்கு மேலதிகமாக, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள ஒன்பது செயல்திட்ட இடங்களிலும் 2019 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சமூக அடிப்படையிலான கூட்டாளர்களால் கூடுதல் பட்டறைகள் நடத்தப்பட்டன. மொத்தமாக 324 உள்ளூர் மைக்ரோ மற்றும் சிறு நிறுவன உரிமையாளர்கள் (71% பெண்) இப்பட்டறைகளில் பங்கேற்றனர். இதில் பங்கேற்றவர்கள், தங்கள் சொந்தத் தொழில்களில் காணப்பட்ட தடைகள் மற்றும் நன்மைகளை அடையாளம் காண்பதற்கு துணைபுரிந்தனர். மேலும், அவர்கள் குறிப்பிட்ட சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பதையும் அறிந்து கொண்டனர். இந்த செயல்திட்டம் பாலின ஒருங்கிணைப்பை ஒரு முக்கியமான விளைவாகக் கருதுவதாலும், செயல்திட்டத்திற்குள் பெண் வணிக உரிமையாளர்களுக்கு அதிக பங்களிப்பைக் கொடுத்துள்ளதாலும், வணிகங்களைச் செய்வதில் ஆண்களும் பெண்களும் எதிர்கொள்ளும் சவால்களை எடுத்துக்காட்டுவதற்காக அனைத்து அமர்வுகளிலும் பெண் தொழில்முனைவோரின் யோசனைகளும் கருத்துகளும் பகிரப்பட்டன.
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் வணிகத் திட்டங்களைத் தயாரித்தல் குறித்த பயிற்சிப் பட்டறை
இதற்கு மேலதிகமாக, பங்கேற்பாளர்களுக்கு முறையான உற்பத்தி, சந்தைப்படுத்தல் மற்றும் நிதித் திட்டங்களை உருவாக்குவதற்கான செயல்முறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. அவர்களின் தொழில்முனைவோர் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கான நோக்கத்துடன் இடர் மேலாண்மை திட்டத்தை உருவாக்குவதற்கு அவர்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டது. இந்த பயிற்சிப் பட்டறைகள், பங்கேற்பாளர்களுக்கு தொழில்முனைவோர் மற்றும் வணிக வளர்ச்சியை பாதிக்கும் பல்வேறு சவால்களை அடையாளம் காணும் திறனை மேம்படுத்தவும், புதிய தொழிலைத் தொடங்குவது மற்றும் ஏற்கனவே உள்ள வணிகங்களை வலுப்படுத்துவது பற்றிய அறிவை வழங்கவும் உதவியது.