கிழக்கு மாகாணத்தில் உள்ள தொழில்மு னைவோர்களிடையே திறனை வளர்ப்பதற்கு INSPIRED ஆனது Good Market உடன் இணைகிறது
செப்டம்பர் 2020 இல், INSPIRED திட்டத்தின் மூலம், திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் மைக்ரோ மற்றும் சிறு வணிக உரிமையாளர்களிடையே திறன் மற்றும் வலையமைப்பை உருவாக்குவதற்கு ஆசிய மன்றம் Good Market உடன் கூட்டுச்சேர்ந்தது. இக்கூட்டாண்மை, அவர்களின் வணிகத் திறன்கள் மற்றும் முன்னோக்குகளை மேலும் நிலையான வழிகளினூடாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, வழிகாட்டுதல், அறிவைப் பகிர்தல் மற்றும் பயிற்சி என்பவற்றின் மூலம் செயல்திட்ட பயனாளிகளுக்கு இடையேயான தொடர்பு மற்றும் இனங்களுக்கிடையிலான சமூக உரையாடல் என்பவற்றிற்கு மேலும் உதவுகிறது.
எனவே, Good Market ஆனது INSPIRED செயல்திட்டக் குழுவுடன் இணைந்து, விநியோகச் சங்கிலி மேலாண்மை, தொழில்நுட்பத்தின் பயன்பாடு, கதைசொல்லல், மதிப்புச் சேர்த்தல் மற்றும் அடையாளப்படுத்தல் (பிராண்டிங்) போன்ற கருப்பொருள்களுக்கு ஏற்றவாறு பயிற்சிகள் வழங்குவதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்திட்ட பயனாளிகளின் சுயவிவரங்களை நன்கு புரிந்துகொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
Good Market (www.goodmarket.global) என்பது அதன் வலையமைப்புக்கள் மத்தியில் சமூக ஒத்திசைவு மற்றும் நிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பொருளாதாரத் துறைகள், வருமான நிலைகள், மொழித் தடைகள் மற்றும் பிராந்திய பிரிவுகள் ஆகியவற்றில் செயல்படும் ஒரு உலகளாவிய தளமாகும். இயக்கத்தை மேலும் வெளிப்படையாகச் செய்வதன் மூலமும், மக்கள் ஈடுபடுவதை எளிதாக்குவதன் மூலமும் நிலையான பொருளாதாரத்தை ஒரு புதிய தளத்திற்கு மாற்றுவதை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், இது சமூக நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், பொறுப்பான வணிகங்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்குபவர்களுடன் இணைகிறது. அவர்களின் தளத்தின் முக்கிய அம்சமானவை பொருளாதாரத் துறைகள், வருமான நிலைகள், மொழித் தடைகள் மற்றும் பிராந்திய பிரிவுகள் ஆகியவற்றில் செயல்படும் ஒரு குறிப்பிட்ட விடயத்துக்கு தொடர்புடைய தகவல்களை சேகரிக்கும் செயல்முறை மற்றும் அவற்றை கண்காணிக்கும் அமைப்பு என்பனவாகும்.